Tuesday, February 19, 2019

ஷியாம் புஷ்கரன் நேர்காணல்

 

மாத்ருபூமி தினசரியில் வந்த ஷியாம் புஷ்கரனுடைய பேட்டியின் முதல் பகுதி.


பொதுவாக சினிமாக்கள் கற்பனைகளை விற்கின்றன. உங்களுடைய சினிமாக்கள் சாதாரண மனிதர்களின் நிராசையையும், தன்னம்பிக்கையையும், பலவீனங்களையும் கொண்டிருக்கிறது. அதன் காரணமென்ன?


அது எங்கள் சினிமாக்களின் சிறிய டெக்னிக். கதாப்பாத்திரங்களின் ஓட்டத்தை நாங்கள் அப்படி உருவாக்குவோம். வீக்நஸ் உள்ள ஒரு கதாநாயகனை வளர்த்தெடுத்து, இறுதியில் சரியானவனாக மாற்றினால், அதில் ஒரு ரஸமிருக்கும். கும்பளங்கி நைட்ஸ் பார்க்கும் பார்வையாளர்கள் ஏமாற்றமடையாது, நிறைவோடு செல்லவேண்டும் என்று நினைத்தோம்.


ஒவ்வொரு படத்திற்கும் ஒரு காரணமிருக்கும்.  கும்பளங்கி நைட்ஸ் எப்படி பிறந்தது?


 கும்பளங்கியில் ஷாஜி நெப்போலியன் என்ற நண்பன் இருக்கிறான். நேரம் கிடைக்கும் பொழுது அவனது வீட்டிற்கு செல்வேன். நகரத்திற்கு மிக அருகிலிருந்தாலும், அங்கு போதுமான வளர்ச்சியில்லாதது, எனக்கு மோசமான அனுபவமாகயிருந்தது. ஆனால் அதுவே அங்கு ஒரு நல்ல சினிமாவை உருவாக்க முடியுமென்பதை எனக்கு காட்டியது. 

(கும்பளங்கி கொச்சிக்கு அருகிலிருக்கும் ஒரு தீவு கிராமம்)


அந்த வித்தியாசமான நிலப்பரப்பு முதலில் தோன்றியதா? அல்லது ரசஸமுள்ள அந்த கதாப்பாத்திரங்கள் முதலில் தோன்றியதா?


இரண்டுமில்லை. குழந்தைகள் சந்தோஷமாய் விளையாடும் ஒரு சிறிய மைதானமும். அதில் அவர்கள் விளையாடுவதை விரும்பாத ஒரு கதாப்பாத்திரமும் (ஷம்மியின் (பஹத்)  கதாப்பாத்திரத்தை சொல்கிறார்) தான் முதலில் தோன்றியது. மற்ற கதாப்பாத்திரங்கள், அதற்கு பின்னால் பின்னப்பட்டது. அதைக்கொண்டு கும்பளங்கியில் ப்ளேஸ் செய்தோம்.


'ஷம்மி' கதாப்பாத்திரம் எங்கிருந்து கிடைத்தது?

 

அந்த கதாப்பாத்திரம் பற்றி நிறைய பேசினால், படத்தின் சஸ்பென்ஸ் குறையும். இன்னும் படம் பார்க்காத ஆட்கள் உண்டு. எல்லா ஆண்களுக்கு உள்ளேயும் ஒரு ஷம்மி கதாப்பாத்திரம் உண்டு. அப்படி பார்த்தால், எனக்குள்ளும் ஒரு ஷம்மியுண்டு. 


காமெடியனாக வந்த சௌபினை மற்றொரு தளத்திற்கு கொண்டு சென்ற பாத்திரம் ஷஜி. அவர் குடும்ப அமைப்பிலிருந்து விலகி வாழும், நான்கு ஆண்களில் ஒரு ஆள்?


நல்ல குடும்பத்தையும் தவறான குடும்பத்தையும் படம் நமக்கு காட்டியிருக்கிறது. அதில் எது நல்ல குடும்பம் எது தவறான குடும்பமென்று உங்கள் பார்வையை கொண்டு தேடலாம். ஷாஜியின் குடும்பத்தால் சில தொந்தரவுகள் நிகழ்ந்தாலும், அக்குடும்பத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது. ஷாஜி கதாப்பாத்திரத்தை மிகந்த சிரத்தையுடனே சௌபின் செய்திருந்தார். ஆனால் அது கற்பனைக்கு மீறி அது வளர்ந்திருந்தது. திரும்பி பார்க்கும் பொழுது, அது மிகவும் சந்தோஷம் தரும் வளர்ச்சியாய் இருந்தது.


Saturday, February 16, 2019

கும்பளங்கி குடும்பங்கள்





ஷியாம் புஷ்கரன் சில உதாரணங்களை முன் வைக்கிறார். அதாவது குடும்ப அமைப்புகள் பற்றி. இரண்டு குடும்ப அமைப்புகளை வரைந்திருக்கிறார். முன்னது, ஒரு நன்கு கட்டியெழுப்பி, பின் சிதைந்து, ஒரு ஆணின் தலைமைக்கு ஏங்கி, பின்னதையடைந்து, அதன்கீழ் சிக்குண்டு கிடக்கும் ஒரு அடிமை குடும்பம். பின்னது, அதற்கு நேர்மாறானது. எவ்வித அமைப்பு கட்டுமானங்களுக்குள்ளும் சிக்காது, தான் தோன்றித்தனமாக பின்னப்பட்டு, வரையறையின்றி வாழும் முன்னதால் கைவிடப்பட்ட ஒரு சகோரதக்குடும்பம். இவ்விரண்டின் வாழ்வியலும் வெவ்வேறான போக்குகளை கொண்டிருந்தது. இன்று ஷியாம் மாத்ருபூமியில் ஒரு பேட்டி தந்திருந்தார். அதில்
ஷியாம் இப்படி சொல்லியிருந்தார். " நான் அதில் ரெண்டு குடும்பங்களை காட்டினேன். ஒன்று நல்ல குடும்பம். மற்றொன்று கெட்ட குடும்பம். அது எது எதுவென்று உங்கள் பார்வைக்கு தெரியும்." இங்கே தான் ஒரு பெருங்கேள்வியே தொடங்குகிறது. எது நல்ல குடும்பம்? இச்சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வடிவ அமைப்பிலும், வாழ் முறையிலும் இயங்கும் குடும்பம் நல்ல குடும்பமா? அல்லது அதன் தோல்வியிலும், அதனால் கைவிடப்பட்டவர்களின் தேவையடிப்படையிலும், அத்தனிமனிதர்களால் அவர்களுக்கேற்றார் போல், பொது சமூக விதிகளின்றி உருவாக்கிக்கொள்ளும் குடும்ப அமைப்பு நல்லதா? பேட்டியில் ஷம்மியை பற்றி ஒரு கேள்வி வந்தது. ஷம்மி முன் சொன்ன குடும்பத்தின் அதிகாரத்தை கையிலெடுத்து, சர்வாதிக்காரம் செய்ய முயலும் ஒரு ஆண். குடும்ப தலைவன். ஷம்மியிடம் இன்னொன்றையும் காணலாம். அவன் அந்த அதிகார இருக்கைக்கு வர அவன் கையிலெடுக்கும் ஆயுதங்கள் பாசம். பொறுப்பு. கடமை. உரிமை. அதாவது இவ்வாயுதங்களை கொண்டே, அவர்களை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவர முயல்கிறான். சரி அவனை பற்றிய கேள்விக்கு வருவோம். "ஷம்மி கதாப்பாத்திரத்தை எங்கிருந்து எடுத்தீர்கள்?" . இது கேள்வி.
"எங்கிருந்தும் எடுக்கவில்லை. எல்லா ஆண்களுக்குள்ளும் ஷம்மி இருக்கிறான். இன்னும் சொல்வதானால், என்னுள்ளிருந்தும் வந்தான்". இது பதில். அப்பதிலின் தொடர்ச்சி எங்கெங்கோ போகும். லெனின் சொன்னது நினைவுக்கு வருகிறது. " குடும்பம் ஒரு குட்டி அரசு". ஆகா அரசின் நோக்கம்? அதன் செயல்பாட்டின் பயன்கள் யாருக்கு சேர்கிறது? அதன் அதிகார அமைப்பு யாருக்கு இயங்கிறது? கேள்விகளுக்கு பஞ்சமில்லை. கீழேயுள்ள படம் பின்ன சொன்ன தான்தோன்றி குடும்பத்தாரின் படம்.

தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி

  கொஞ்சம்   யோசித்துப்   பாருங்கள் .. 2014,  டிசம்பர்  3,  இரவு   சுமார்   எட்டு   மணி   இருக்கும் “ மூக்கின்   மேலே மூக்குத்தி   போலே மச்சம...