மாத்ருபூமி தினசரியில் வந்த ஷியாம் புஷ்கரனுடைய பேட்டியின் முதல் பகுதி.
பொதுவாக சினிமாக்கள் கற்பனைகளை விற்கின்றன. உங்களுடைய சினிமாக்கள் சாதாரண மனிதர்களின் நிராசையையும், தன்னம்பிக்கையையும், பலவீனங்களையும் கொண்டிருக்கிறது. அதன் காரணமென்ன?
அது எங்கள் சினிமாக்களின் சிறிய டெக்னிக். கதாப்பாத்திரங்களின் ஓட்டத்தை நாங்கள் அப்படி உருவாக்குவோம். வீக்நஸ் உள்ள ஒரு கதாநாயகனை வளர்த்தெடுத்து, இறுதியில் சரியானவனாக மாற்றினால், அதில் ஒரு ரஸமிருக்கும். கும்பளங்கி நைட்ஸ் பார்க்கும் பார்வையாளர்கள் ஏமாற்றமடையாது, நிறைவோடு செல்லவேண்டும் என்று நினைத்தோம்.
ஒவ்வொரு படத்திற்கும் ஒரு காரணமிருக்கும். கும்பளங்கி நைட்ஸ் எப்படி பிறந்தது?
கும்பளங்கியில் ஷாஜி நெப்போலியன் என்ற நண்பன் இருக்கிறான். நேரம் கிடைக்கும் பொழுது அவனது வீட்டிற்கு செல்வேன். நகரத்திற்கு மிக அருகிலிருந்தாலும், அங்கு போதுமான வளர்ச்சியில்லாதது, எனக்கு மோசமான அனுபவமாகயிருந்தது. ஆனால் அதுவே அங்கு ஒரு நல்ல சினிமாவை உருவாக்க முடியுமென்பதை எனக்கு காட்டியது.
(கும்பளங்கி கொச்சிக்கு அருகிலிருக்கும் ஒரு தீவு கிராமம்)
அந்த வித்தியாசமான நிலப்பரப்பு முதலில் தோன்றியதா? அல்லது ரசஸமுள்ள அந்த கதாப்பாத்திரங்கள் முதலில் தோன்றியதா?
இரண்டுமில்லை. குழந்தைகள் சந்தோஷமாய் விளையாடும் ஒரு சிறிய மைதானமும். அதில் அவர்கள் விளையாடுவதை விரும்பாத ஒரு கதாப்பாத்திரமும் (ஷம்மியின் (பஹத்) கதாப்பாத்திரத்தை சொல்கிறார்) தான் முதலில் தோன்றியது. மற்ற கதாப்பாத்திரங்கள், அதற்கு பின்னால் பின்னப்பட்டது. அதைக்கொண்டு கும்பளங்கியில் ப்ளேஸ் செய்தோம்.
'ஷம்மி' கதாப்பாத்திரம் எங்கிருந்து கிடைத்தது?
அந்த கதாப்பாத்திரம் பற்றி நிறைய பேசினால், படத்தின் சஸ்பென்ஸ் குறையும். இன்னும் படம் பார்க்காத ஆட்கள் உண்டு. எல்லா ஆண்களுக்கு உள்ளேயும் ஒரு ஷம்மி கதாப்பாத்திரம் உண்டு. அப்படி பார்த்தால், எனக்குள்ளும் ஒரு ஷம்மியுண்டு.
காமெடியனாக வந்த சௌபினை மற்றொரு தளத்திற்கு கொண்டு சென்ற பாத்திரம் ஷஜி. அவர் குடும்ப அமைப்பிலிருந்து விலகி வாழும், நான்கு ஆண்களில் ஒரு ஆள்?
நல்ல குடும்பத்தையும் தவறான குடும்பத்தையும் படம் நமக்கு காட்டியிருக்கிறது. அதில் எது நல்ல குடும்பம் எது தவறான குடும்பமென்று உங்கள் பார்வையை கொண்டு தேடலாம். ஷாஜியின் குடும்பத்தால் சில தொந்தரவுகள் நிகழ்ந்தாலும், அக்குடும்பத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது. ஷாஜி கதாப்பாத்திரத்தை மிகந்த சிரத்தையுடனே சௌபின் செய்திருந்தார். ஆனால் அது கற்பனைக்கு மீறி அது வளர்ந்திருந்தது. திரும்பி பார்க்கும் பொழுது, அது மிகவும் சந்தோஷம் தரும் வளர்ச்சியாய் இருந்தது.

No comments:
Post a Comment