அய்யப்பனம்மே நெய்யப்பம் சுட்டு /2019 / குட்டநாட்டு குஞ்ஞுமோன் / 102 mins / malayalam
Monday, December 30, 2019
அய்யப்பனம்மே நெய்யப்பம் சுட்டு திரைப்படம் - தென்னைநாரில் தத்ததளிக்கும் ஒரு தென்னகத்து வாழ்வியல்
அய்யப்பனம்மே நெய்யப்பம் சுட்டு /2019 / குட்டநாட்டு குஞ்ஞுமோன் / 102 mins / malayalam
Tuesday, December 3, 2019
ஓநாய் குலச்சின்னம் - சில கேள்விகள்
ஓநாய் குலச்சின்னம்.
மேய்ச்சல் நிலத்துக்காரர்கள் அவர்களின் மூதாதைய இனமான ஓநாய்களிடமிருந்து, தங்கள் இனத்தின் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான ஊந்து விசையையும், தன் சந்ததிகளுக்கு சேமித்துவைக்க ஞான அறநெறியையும் பயின்றிருக்கிறார்கள். இந்த பாடமானது வானிலை, நிலத்தோற்றம் மற்றும் அதன் குணங்கள், சக உயிரினங்கள் மற்றும் அவை இருத்தலுக்கான நியாங்கள், தங்களுடைய மற்றும் தங்களுடைய எதிரிகளின் பலங்கள், பல்வேறு வகையான தாக்குதல்கள், யுத்த வழிமுறைகள், அந்த யுத்தங்கள் கோரும் பொறுமைகள், இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மனிதன் அல்லது ஒரு இனம், தன் எதிரிகளிடம் அடிமைப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள, தான் சரணடைவதற்கு முன்பாக மரணத்தை தேர்வு செய்யும் ஆன்ம பலம் போன்றவற்றை கொண்டது.
மேலும் இந்நாவல் எனக்கு பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த பெருநிலமானது எந்த உயிரின அதிகாரத்திற்கு கட்டுப்படுகிறது? தன் சக அதிகார உயிரினங்களுடன் எப்பொழுதும் இறுக்கம் கொண்டே வளர்ந்து வரும் ஒரு உறவை, இந்த அதிகார உயிரினங்கள் எவ்வாறு அனுபவித்து தன்னை வளர்த்துக்கொள்கின்றன? தங்கள் கலாச்சாரங்களின் வளர்ச்சிகள் / தோல்விகள் என்பது, சக அதிகார மனித இனங்கள் அல்லது சக அதிகார உயிரினங்களுடனான முரணிலிருந்து தொடங்குகிறதா? அல்லது இப்பெருநிலமே தான் எல்லாவற்றுக்குமான ஏக அதிகாரம் படைத்த ஒரு உண்மையா?
சீன மொழி மூலம் : ஜியாங் ரோங்.
தமிழில் சி.மோகன் மொழிப்பெயர்க, இயக்குனர் வெற்றிமாறனின் 'அதிர்வு பதிப்பகம்' வெளியிட்டுள்ளது.
Monday, December 2, 2019
லோகிததாஸ்
"நகரங்களின் உயர்ரக திரையரங்குகளில் ஜிப்பா போட்டுக்கொண்டு படம் பார்க்க வரும் தாடிக்காரர்கள் அல்ல எனது இலக்கு. என்னுடைய பார்வையாளன் மண்வெட்டியை கழுவி வீட்டில் வைத்துவிட்டு குளித்து ஒரு துவைத்த பழைய வேட்டியை கட்டிக்கொண்டு வந்து படம் பார்க்க அமரும் எளிய மனிதன். நான் போவது அவனை நோக்கித்தான்."
மிகவும் பழகிப்போன பழைய வசனம் இது. தமிழில் அடிதடி குத்துப்பாட்டுகளுடன் படம் எடுக்கும் திரைப்படக்காரர்களும் இதைத்தான் கூறுவார்கள். ஆனால் லோகி ஒருபோதும் சாமானியனின் சபலங்களை பயன்படுத்திக் கொண்டவரல்ல. சாமானியனின் சலிப்பையும் அக்கறையின்மையையும் நம்பி படம் எடுத்தவரல்ல. எளிய மக்களின் உள்ளே சுடர்விடும் நீதியுணர்வை நம்பி படம் எடுத்தவர் அவர். அவர்களுடைய சுயமரியாதையையும் மானுட உணர்வையும் தொட்டுப்பேச முடிந்தவர். அதனாலேயே அவர் அம்மக்களின் ப்ரியத்துக்குரியவராக இருந்தார். வாழ்நாள் முழுக்க லோகி "அமரத்தில்"தான் அமர்ந்திருந்தார்.
லோகி நினைவுகள் மதிப்பீடுகள்
தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் .. 2014, டிசம்பர் 3, இரவு சுமார் எட்டு மணி இருக்கும் “ மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம...
-
மலையாள எழுத்தாளர் (ஈ.ம.யௌ திரைக்கதையாளர்) P F Mathewsன் நேர்காணல் மலையாள மனோரமாவிலிருந்து, மலையாள மூலம் - லெட்சுமி விஜயன். ...
-
கவிதாலயா தயாரிப்பில், அமேசான் ப்ரைம் வெளியிட்டிருக்கும் காமெடி தொடர் ‘டைம் என்ன பாஸு’. நரு நாராயணன், மஹாகெர்தியுடன் சூப்பர் சுபு எழுதி ...
-
ஆசான் பத்மராஜனின் பெரும்பாலான படங்களின் சாரம் உடல்கள் என்ற 'பாலியல் கருவி' மூலம் செலுத்தப்படும் அதிகாரமும், அது எவ்வாறு இரு பாலினங...


