1. சிறுபான்மையினர்/ஒடுக்கப்பட்டவர்கள் அப்பாவிகளாகவோ, ஏழைகளாகவோ நல்லவர்களாகவோ இருப்பது மட்டும் அவர்கள் ஒடுக்குமுறைக்கு ஆட்படுவதற்கு காரணமல்ல. பொருளாதார ஒடுக்குமுறை வேறு. சமூக ஒடுக்குமுறை வேறு. பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு ஏழையும், சிறுபான்மை/ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு ஏழையும் ஒரே தட்டில் வைக்க முடியாது.
2. சிறுபான்மையினரின்/ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளங்களினாலேயே அவர்களின் இருத்தல் பெரும்பான்மையினரின் நாஜித்தனத்தால் அச்சுருத்தப்படுகிறது. அடையாளங்கள் எனில், கலாச்சாரம், வழிப்பாட்டுமுறை, உடை, உணவு, அதன் சமுதாய/குடும்ப அமைப்பு, கலையிலக்கியம், அதன் சமுதாய சடங்குகள் போன்றவை. ஆகவே, அந்த அடையாளங்களே அவர்களின் போராட்டத்தில் ஒரு பெரிய/முக்கிய கருவியாக இருக்க வேண்டும். மேலும் அந்த அடையாளங்களை முன்னிருத்தலே ஒரு அரசியல் செயல்பாடு தான். (இதில் தன் அடையாளகங்களை முன்னிறுத்தி, சுய சமுதாய/இன பெருமை பேசுதல் சேராது. மேலும் அச்சிறுபான்மையினரின் சமூகநிலையை பொறுத்து அடையாள அரசியலின் வரையறை மாறுதலுக்கு உட்படலாம் )
3. சிறுபான்மையினரை எவ்வளவு விமர்சனத்திற்கு உட்படுத்துகிறோமோ, அதே அளவு அவர்கள் சமூகத்தில் எவ்வித ஒடுக்கப்படலுமின்றி இயங்குவதற்கான ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.
4. அரசியல் பேசாத, வெறும் இரக்கமும், கனநேர செயற்கையான சோகக்காட்சிகளும், எவ்வித அரசியல் தீர்வுக்கும் இட்டு செல்லாது. மாறாக அது பார்வையாளரின் அரசியல் பார்வையை (சிறுபான்மையினர்/ஒடுக்கப்பட்டோர் மீதான) மட்டுப்படுத்தி, அரசியல் பாதையிலிருந்து எதிர்ப்பக்கம் திருப்பிவிட்டு, உண்மையான குற்றவாளிகளை பார்வையாளர்களின் கண்களிலிருந்து தூரமிட்டு செல்லும்.
ஆனால் ஜிப்ஸி, ட்ரான்ஸ், மோடி அண்ட் பீர், நஸீர் போன்ற படங்கள் இதை செய்யத்தவறியதாகவே எனக்கு தோன்றுகிறது.

No comments:
Post a Comment