கேள்வி : மகேஷாக பஹத் நடித்தது குறித்து ஷ்யாம் புஷ்கரன் கூறும்பொழுது, ஆலப்புழாவிலுள்ள (பஹத்தின் சொந்த ஊர்) ஒரு நாட்டுப்புறத்தான் பஹத்துக்குள்ளேயிருக்கிறான் என்றிருக்கிறாரே?
பஹத் : நம்மை போல இல்லையென்றாலும், நாம் பார்த்த ஒரு ஆளை போல் உள்ளவன் தான் மகேஷ். ஷியாமும் திலீஷும் மகேஷ் கதாப்பாத்திரம் பற்றி விளக்கியது மிகத்தெளிவாகயிருந்தது. படப்பிடிப்புக்கு போகும் முன் இருவரும் என்னை ஒரு சாயா கடைக்கு கூட்டி சென்றனர். அங்கு தான் இந்த கதாப்பாத்திரம் குறித்து பேசினோம். அடுத்து தான் படப்பிடிப்பிற்கு சென்றோம். அது போல ஒரு இந்திய பிரணய கத படத்தில் நான் பாக்கெட்டில் கை வைத்துக்கொண்டு ஓடுவது போல் ஒரு காட்சி வரும். அதை நெடுமுடி வேணு (ஆலப்புழாவிலுள்ள நெடுமுடியை சேர்ந்தவர் மூத்த நடிகர் நெடுமுடி வேணு) பார்த்து விட்டு, "இந்த ஓட்டம் எனக்கு என் வாப்பாவை நினைவுப்படுத்துகிறது. அவர் காலேஜ் படிக்கும் காலத்தில் ஸ்ட்ரைக் நடக்கும் பொழுது, பாக்கெட்டில் உள்ள வண்டிக்கூலி தொலைந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி தான் பாக்கெட்டில் கை வைத்துக்கொண்டு ஓடுவாராம்" என்றார். ஒரு இந்திய பிரணய கத முதல் நாள் கதை கேட்டு, அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு சென்ற படம். அது ஹியூமர் உள்ள கதை என்றாலும், அந்த கதாப்பாத்திரத்தின் வேதனையை தான் நாம் (நடிகன்) எடுத்துக்கொள்ள வேண்டும். வேட்டி அவிழ்க்கப்பட்ட மகேஷின் வலியை நாம் (நடிகன்) உணர்ந்தால் தான், அந்த கதாப்பாத்திரத்தை உருவப்படுத்தவும், அதை மெருகேற்றவும் முடியும். மகேஷை போல வாட்சில் மணி பார்க்கும் ஆட்களை நான் நிறைய கண்டுள்ளேன். கையிலுள்ள வாட்சில் மணியை பார்த்துவிட்டு, நம்மிடம் மீண்டும் மணி என்ன என்று கேட்கும் ஆட்கள் உண்டு. நம்முடைய பார்வையையும் அப்ஸர்வேஷனையும் ஒன்றாக்கும்போது, கதாப்பாத்திரத்தோடு நெருங்கிவர முடியும்.
( மலையாள மூலம் : மனீஷ்நாராயணன் சில வருடங்களுக்கு முன்பு பஹத்தை எடுத்த பேட்டி)

No comments:
Post a Comment