யுவனின் எழுத்துக்கள் மேல் எனக்கு எப்போதும் ஒரு கவர்ச்சி இருந்தது. கவர்ச்சியென்று குறுக்கி போடுவதைவிட, என்மீது திணிக்கப்பட்டிருந்த ஒரு இருண்மை வாழ்க்கையின் ஒரு பிரதானபகுதியை, எங்கோ ஒரு மூலையில் நின்றுக்கொண்டு, ஒரு மூன்றாவது மனிதனின் எழுத்தில் அதை மீட்டுருவாக்கி, அது தந்துவிட்டு போன சுரனையற்ற வடுவை எச்சில் தொட்டு அழிக்க நினைக்கும் ஒரு பாலகனின் சிறுபிள்ளைத்தனத்தை அவ்வெழுத்தால் என்னுள் உணர்ந்திருக்கிறேன்.
ஒரு எளிய கதையை திரும்ப திரும்ப எழுதுவது மூலம், இன்னும் இன்னும் வெளி வராத, யாரும் எழுத எத்தனிக்காத ஆயிரம் தனி மனித சிக்கல்களை, எவ்வித போலி வர்ணனை சால்ஜாப்புகளுமின்றி பேசிவிட்டுப்போவதாக எனக்கு தோன்றும். மேலும் சாலிகிராமம் நூலகத்திலிருந்துக்கொண்டு, மதுரையில் நான் நடைப்போட்ட தெருகளையும், அதில் நான் கவனியாது போன மனிதர்களையும் அவர்களின் அகவாழ்க்கையையும் என்னால் யுவன் மூலம் காணமுடிந்தது.

No comments:
Post a Comment